கோலாலம்பூர், நவம்பர் 20- நேற்று 2012-ஆம் ஆண்டுக்கான யூ.பி.எஸ்.ஆர் தேர்வு முடிவுகள் வெளியாகின. இத்தேர்வில் மொத்தம் 1045 தமிழ்ப்பள்ளி மாணவர்கள் 7ஏக்கள் பெற்று சாதனை படைத்துள்ளனர். எனினும், கடந்த ஆண்டு 1218 மாணவர்கள் 7 ஏக்கள் பெற்றிருந்த வேளையில் இவ்வாண்டு இந்த எண்ணிக்கையில் சரிவு ஏற்பட்டுள்ளது.
மாநில ரீதியில், சிலாங்கூர் மாநிலம் தான் யூ.பி.எஸ்.ஆர் தேர்ச்சி விகிதத்தில் முதலிடம் வகிக்கிறது என்றாலும், கடந்தாண்டை விட இந்த எண்ணிக்கை குறைவு என்றே கூறலாம்.
மாநில ரீதியாக யூ.பி.எஸ்.ஆர் தேர்வில் 7ஏக்கள் பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை பின்வருமாறு:
சிலாங்கூர்: 2011 -351
:2012 -312
ஜொகூர் : 2011 -232
:2012 - 205
பேராக் :2011 - 209
:2012 -152
நெகிரி செம்பிலான்: 2012 – 121
மலாக்கா: 2011 -59
: 2012 -23
பகாங் :2012- 40
பினாங்கு :2011-59
: 2012 -45
Source : Vanakkam Malaysia
No comments:
Post a Comment